பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

409 0

செங்கோட்டை:

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது.

ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருவது வழக்கம். நேற்றும் அவர்கள் செங்கோட்டைக்கு வந்த கொல்லம் ரெயிலை கண்காணித்தனர்.பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில்  விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு | Passengers saved lives by  avoiding a major ...

அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 என்ற 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மேற்கொண்டு அந்த ரெயில் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும்.

அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிச்சட்டம் விரிசலை துரிதமாக கண்டுபிடித்த ஊழியர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

Related Post

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

செல்போனில் பேசியபோது “வெடிகுண்டு” என சொன்னதால் பயணி கைது: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

Posted by - June 9, 2023 0
புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது…

45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

Posted by - July 31, 2023 0
சித்தூர்: எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி…

இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted by - September 17, 2024 0
புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்த நாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *