சீலிங் Fan -ஐ சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கா.? இந்த ஈஸியான டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

665 0

சில பொருட்களை விழா நாட்கள் அல்லது விஷேச நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்போம். அந்த வரிசையில் சீலிங்ஃபேனுக்கும் இடமுண்டு. இதற்கு காரணம் அதை துடைக்க கடினம் என்பதுதான். இருப்பினும் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்.

வீட்டை நாள்தோறும் சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண விஷயமில்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே சில குப்பைகள் அல்லது தூசுகள் இருந்து கொண்டே இருக்கும். இன்னொருபுறம் சில பொருட்களை விழா நாட்கள் அல்லது விஷேச நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்போம். அந்த பொருட்களில் குப்பைகள் படிந்து, நாள்தோறும் பறந்து கொண்டு இருக்கும்.
அப்படியான பொருட்களில் ஒன்று வீட்டில் இருக்கும் சீலிங் பேன். அதனை நாள்தோறும் சுத்தம் செய்ய மாட்டோம் அல்லது செய்ய இயலாது. விஷேச நாட்களில் மட்டுமே சுத்தம் செய்யப்படும் பொருள் என்பதால், அதில் தூசுகள் நிறைந்திருக்கும். உடனடியாக நீக்குவதற்கும் கடினமாக இருக்கும். இந்த சிரமத்தை எதிர்கொள்பவர்களுள் ஒருவராக நீங்களும் இருந்தால், அதனை ஈஸியாக சுத்தம் செய்வதற்கான டிப்ஸை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தலையணை உறை : சீலிங் பேனை தூசுகள் பறக்காமல் அல்லது முகத்தின் மீது விழாமல் சுத்தம் செய்ய ஏதுவான ஒன்று தலையணை உறைகள். நீங்கள் சீலிங் பேனை சுத்தம் செய்ய முடிவெடுத்த பிறகு, வீட்டில் இருக்கும் பழைய தலையணை உறையை எடுத்துகொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் முகத்தில் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பின்னர், சீலிங் பேனின் இறக்கைகளை தலையணை உறையால் கவர் செய்து கொள்ளுங்கள். இறுக்கமாக அந்த உறையை இறக்கையை சுத்தம் செய்யுமாறு பிடித்துக்கொண்டு மெதுவாக உறையை வெளியே இழுங்கள். தற்போது சீலிங் பேனின் இறக்கைகள் மீது இருக்கும் தூசிகள் தலையணை உறைக்குள் இருக்கும். சீலிங் பேனும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும்.
வேக்யூம் கிளீனர் (Vacuum Cleaner) : ஏதாவதொரு சந்தர்பத்தில் வேகம்யூம் கிளீனரை கண்டுபிடித்தவருக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இதன் மூலம் நம் கிளீன்ங் வேலை மிகவும் சுலப்படுத்தப்பட்டிருக்கிறது. வேக்யூம் கிளீனரைக் கொண்டு உங்களுடைய சீலிங் பேனை சுத்தம் செய்யலாம். மிகப்பெரிய குச்சியில் வேக்யூம் கிளீனரை இணையுங்கள். முகத்தை நன்றாக மூடிக்கொண்ட பிறகு, வேக்மயூம் கிளீனரை பயன்படுத்தி சீலிங் பேனை சுத்தம் செய்யுங்கள். பேன் இறக்கைகள் மீது இருக்கும் தூசுகள் காணாமல் போய் இருக்கும்.
சாக்ஸ் ( Socks) : உங்களிடம் பழைய சாக்ஸ்கள் இருந்தால் அதனை தூக்கி எறிந்துவிட வேண்டாம். கிளீனிங் வேலை நடைபெறும் நாட்களில் சீலிங் பேன்களை சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும். முதலில் பழைய சாக்ஸ் ஒன்றை எடுத்துகொள்ளுங்கள். அதனை நீரில் நனைத்த பிறகு சாக்ஸை சீலிங் பேனின் இறக்கை மீது வையுங்கள். சாக்ஸின் இரண்டு முனைகளையும், தங்களது இரு கைகளால் பிடித்துக்கொண்டு மெதுவாக தூசியை சுத்தப்படுத்துங்கள். சீக்கிரம் சீலிங் பேன் சுத்தமாகும்.
காப்வெப் பிரஷ் (Cobweb Brush) : காப் வெப் பிரஷ் அல்லது ஸ்பைடர் பிரஷ் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இருக்கும். இந்த பிரஷ் இருந்தால் சீலிங் பேனை ஈஸியாக சுத்தம் செய்துவிடலாம். ஏனென்றால், சிலந்தி வலையைப் போல் இந்த பிரஷ்ஷின் அமைப்பு ரவுண்டாக விரிதிருக்கும் என்பதால், ஒட்டடை மற்றும் தூசுகளை சுத்தம் செய்வதற்கு எளிமையாக இருக்கும். நீளமான குச்சி ஒன்றின் முனையில் இந்த பிரஷ்ஷைக் கட்டிவிடுங்கள். மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை துணியால் மூடிக்கொண்ட பிறகு, அந்தக் குச்சியை கொண்டு சீலிங் பேனின் இறக்கைகளை சுத்தம் செய்யுங்கள்.
இதுநாள் வரை சீலிங் பேனை சுத்தம் செய்ய கஷ்டப்பட்டு கொண்டிருந்தீர்கள் என்றால், இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

Related Post

சும்மா வாய்க்கு வருவதை சொல்ல கூடாது – ப்ளூ சட்டை மாறனை சாடிய டாப் 10 மூவிஸ் சுரேஷ்குமார்

Posted by - January 6, 2023 0
சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் இந்த நடத்தி வந்த…

லீக் ஆன லிஸ்ட்…டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்..

Posted by - June 17, 2025 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ்…

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

Posted by - November 14, 2023 0
பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *