செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் – 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா

281 0

மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள். செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் “ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் - 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா | Houthi  Attack Continues On Red Sea - US Shoots Down 21 Missiles
இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர். இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது. “டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

Related Post

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

Posted by - December 20, 2023 0
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி…

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

Posted by - July 17, 2023 0
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த…

உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

Posted by - February 16, 2023 0
வாஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே குடியரசு…

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் காண நீங்கள் தயாரா?

Posted by - March 27, 2023 0
நியூயார்க் : இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?…

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் – மகளிரை பெருமைப்படுத்த சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - March 8, 2023 0
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்டு பெண்களை கூகுள் கவுரவித்துள்ளது. பெண்களுக்‍கு பெண்கள் ஆதரவாக இருக்‍க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தன் சக பெண்களுக்‍கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *