தனது ஹீரோவுடன் துபாயில் வலம்வரும் வெங்கட்பிரபு.. யாரா இருக்கும்..?

333 0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.Venkat Prabhu in next movie hero announcement - தமிழ் News - Time News

‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘கஸ்டடி’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, துபாயில் இப்படத்தின் பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில், “திரைத்துறையில் 16 வருடங்கள், தற்போது துபாயில் எனது ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவுடன் ‘கஸ்டடி’ பின்னணி இசை பணியில் ஈடுப்பட்டுள்ளேன். மன்னிக்கவும் பிரேம் ஜி. அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Related Post

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

மார்கழியில் ஏன் திருமணம் செய்வதில்லை தெரியுமா?

Posted by - December 30, 2022 0
Margazhi month 2022 | மார்கழி மாதத்தில் பயிர் வளரும் காலமாகும். இந்த மாதத்தில் விதை விதைப்பதில்லை. அதனால்தான் வம்ச விருத்திக்காக செய்யப்படும் திருமணமும் இந்த மாதம்…

குருபெயர்ச்சி 2024…

Posted by - April 30, 2024 0
விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார். இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி…

தண்டுவடத்தை வலுவாக்கும் தண்டயமன தனுராசனம்

Posted by - February 21, 2023 0
உடலை வில் போன்று வளைக்கும் ஆசனம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தண்டுவடத்தை வலுவாக்கும், உடல் முழுவதும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி தசைகளை உறுதி செய்யும் தனுசாரத்தின் மற்றொரு வகை…

ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

Posted by - December 31, 2022 0
சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *