தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

213 0

தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்..

நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகராக வலம் வருபவர் தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தொடங்கிய இவரது திரை பயன் தற்போது வரை பல பரிமாணங்களை கொண்டு உச்சத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. தற்போது தனது 50 வது படத்தை தானே  இயக்கி நடித்து வருகிறார் தனுஷ், இந்த படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில்  செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

News18கடந்த மாதம் ஏஆர் ரஹ்மான் இசையில், தனுஷ் குரலில் ‘அடங்காத சூரன்’ பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் ஜூன் 1 ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏஆர் ரஹ்மானின் கான்செர்ட் நடைபெறும் எனவும், மேலும் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை வரவைத்து அவர்களை சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து தனுஷ் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் துவக்கம்..!!

Posted by - March 20, 2024 0
தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ‛அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இசை உலகின்…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?

Posted by - August 17, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பி வரும் படம் ஜெயிலர். ரஜினி அண்ணாத்த படம் கொஞ்சம் டல் அடித்தாலும் அதன்பிறகு வந்துள்ள ஜெயிலர் நாளுக்கு நாள் வசூலில்…

ஷங்கருக்காக இணைந்த லோகேஷ் கனகராஜ், மணி ரத்னம், முருகதாஸ், கவுதம் மேனன்.. வெளிவந்த புகைப்படம்

Posted by - August 4, 2023 0
ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் ஜெஞ்சர்…

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - December 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *