தமிழ் சினிமாவை விழுங்கும் திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம்….

103 0

தமிழ் சினிமா, ஒரு காலத்தில் இந்தியாவின் கலை, தொழில்நுட்ப சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத துறையாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடைபெறும் எதிர்மறை (negativity) பிரச்சாரங்கள், இந்தத் துறையை மெதுவாக நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றன.

பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் நேரத்தில், குறிப்பிட்ட சில பிரிவுகள் ஒரே மாதிரியான விமர்சனங்களை, meme-களை, தவறான தகவல்களை பரப்பி, பொதுமக்களின் மனதில் குழப்பத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறார்கள். இது சாதாரண ரசிகர் விவாதமல்ல , இது ஒரு திட்டமிடப்பட்ட ‘propaganda’ நடவடிக்கை.

ரஜினிகாந்த் போன்றவர்களின் மிகப்பெரிய fan base கூட 30% வரை இந்த விளைவுகளைத் தவிர்க்க முடியாமல் இருக்கின்றனர். பிற நட்சத்திரங்கள் மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்களுக்கு இதுவே வேரறுக்கும் அளவுக்கு ஆபத்தாக இருக்கிறது.

இதன் விளைவாக, பாக்ஸ் ஆபிஸ் வசூல், திரையரங்குகளின் செல்வாக்கு, சினிமா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது. வட அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்கள், தற்போது நேரடியாக தெலுங்கு படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். காரணம், தமிழ் சினிமாவிற்கு எதிரான இவ்வகை பிரச்சாரங்கள் தான், அதன் மதிப்பையும், மார்க்கெட்டையும் பாதித்துவிட்டன.

சன்பிக்சர்ஸ் மற்றும் மற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், இப்படிப்பட்ட எதிர்மறை சக்திகளுக்கு எந்த விதமான விளக்கமும் கொடுக்காமல், தரமான படங்களை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சுத்தமற்ற சூழலை மாற்ற முடியும் அதிகாரம் நம்மிடம் தான் இருக்கிறது. ரசிகர்கள், வணிகர்கள், ஊடகங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் உண்மையாக திரைதுறைக்காக ஒன்று கூட வேண்டிய நேரம் இது.

Related Post

பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. ‘சந்திரமுகி -2’ சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

Posted by - April 4, 2023 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு,…
image 5

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

Posted by - February 9, 2026 0
நடிகர் ரஜினி உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் தற்போதும் இருந்து வருகிறார். ரஜினி உடன் நடித்த போது நடந்த பழைய நினைவுகளை நடிகை ராதிகா தற்போது ஒரு…

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு லாரன்ஸுக்கு போட்ட குட் பை.. தம்பியை டீலில் விடும் ராகவா மாஸ்டர்

Posted by - September 18, 2024 0
ராகவா லாரன்ஸ் ரொம்ப பிஸியாக நான்கு முதல் ஐந்து படங்களில் வேலை செய்து வருகிறார். தன்னுடைய சொந்த தம்பி எல்வின் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கேமியோ ரோல்…

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

Posted by - June 8, 2023 0
விஜய் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *