தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

454 0

தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்படுவதாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

எதையும் அளவாக குடித்தால் நல்லது என கூறுவார்கள். ஒரு வகையில் மதுபானத்தையும் அப்படி கூறலாம். இன்றைய காலத்தில் மதுபானம் குடிப்பவர்களை விட அப்பழக்கம் இல்லாதவர்களின் எண்ணிக்கை தான் குறைவாக இருக்கிறது. இரவு நேரத்தில் கொஞ்சமாக மதுபானம் குடித்தால், அது செரிமானத்திற்கு உதவும் என பலர் நம்புகிறார்கள்.

இது நம் உடலில் மயக்க மருந்து போல் வேலை செய்யக் கூடியது. இருப்பினும், தினமும் மதுபானம் குடிப்பது உங்கள் உடலுக்கு கேடை விளைவிப்பதோடு கல்லீரலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்படுவதாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.“நீங்கள் தினமும் மதுபானம் குடிப்பவராக இருந்தால்,

ஆரம்பத்தில் உங்களுக்கு செரிமானப் பிரச்சனை ஏற்படும். அடுத்ததாக, அடி வயிற்றில் வலி ஏற்பட்டு அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்படுவீர்கள். அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ரத்த அழுத்தத்தை பாதித்து உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்குவதோடு, நமது கணையத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படக் கூடும்” என மதுவினால் ஏற்படும் கேடுகளை விவரிக்கிறார் டாக்டர்.மனோஜ் குப்தா.

மதுபானத்தின் விளைவுகளை கல்லீரல் திறம்பட முறியடித்தாலும், தினமும் குடித்தால் அந்த சுமையை கல்லீரலால் தாங்க முடியாது. இதன் காரணமாக கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையே நாம் கல்லீரல் வீக்க நோய் என அழைக்கிறோம். இந்த நோயினால் நமது கல்லீரலில் வீக்கமும் காயமும் உருவாகிறது. முடிவில் கல்லீரல் செயலிழந்து விடுகிறது. இது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

எவ்வுளவு மதுபானம் குடித்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு அளவாக மாதுபானம் குடித்தாலே அது கல்லீரல் நோய் வரும் ஆபத்தை அதிகரிக்கும். மதுபானம் குடிப்பதால் உங்கள் உடலில் ஏதாவது தீங்கு ஏற்படுகிறதா என சந்தேகம் இருந்தால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கல்லீரல் எந்தளவிற்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பதை அவர்கள் பரிசோதித்து, அதற்குண்டான சிகிச்சையை வழங்குவார்கள். நீண்டகாலமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஹெபடைடிஸ் மற்றும் அழற்சி நோயினால் பாதிக்கபடுவார்கள்.

“கல்லீரலில் வீக்கம், கல்லீரலில் அழற்சி போன்றவை இருந்தால் அது மஞ்சள் காமாலை, பாதங்களில் வீக்கம், வயிறு உப்புசம், குடலில் ரத்தப்போக்கு, மலத்தில் ரத்தம் போன்றவற்றை உண்டாக்கும். நீண்ட காலம் மதுப்பழக்கம் இருந்து வந்தால், அது புற்றுநோய் வரும் ஆபத்தையும் அதிகரிக்கும்” என டாக்டர். மனோஜ் குப்தா எச்சரிக்கிறார்.

Related Post

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

Posted by - August 14, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது. மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக்…

செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்.. மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!

Posted by - April 5, 2023 0
Mobile Tips: அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். உண்மையிலேயே நம்முடைய மொபைல்…

மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Posted by - September 15, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா…

சீலிங் Fan -ஐ சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கா.? இந்த ஈஸியான டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

Posted by - December 3, 2022 0
சில பொருட்களை விழா நாட்கள் அல்லது விஷேச நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்போம். அந்த வரிசையில் சீலிங்ஃபேனுக்கும் இடமுண்டு. இதற்கு காரணம் அதை…

அடிக்கடி சார்ஜ் போடும் பழக்கம்.. மொபைல் போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் தெரியுமா? இந்த தவறை செய்யாதீங்க..

Posted by - March 7, 2024 0
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கேமரா, டிஸ்பிளே போன்றே பேட்டரி மற்றும் ஃபாஸ்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *