திரிஷாவிற்காக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்

222 0

திரிஷா – மன்சூர் அலிகான்

திரிஷாவை பற்றி தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலி கான் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன்பின் தேசிய மகளீர் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், இதுவரை மன்சூர் அலிகான் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை.த்ரிஷாவை நான் தப்பா பேசல.. எவனோ கொம்பு சீவிவிட்டு இருக்கான்.. மன்சூர்  அலிகான் விளக்கம்! | Actor Mansoor Ali Khan gave an explanation about Trisha  issue - Tamil Filmibeat

மன்னிப்பு கேட்க மாட்டேன்

இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள மன்சூர் அலிகான். இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என தெளிவாக கூறியுள்ளார். திரிஷா குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டதாகவும். தான் பேசியது தொடர்பாக தன்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்க வில்லை என்றும் மக்களுக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும், தமிழ்நாடே தன் பக்கம் தான் என பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படி இவர் பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ஆதரவு

திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது மிகவும் அருவருப்பான விஷயம். நான் திரிஷாவுடன் நிற்கிறேன் என கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த விஷயம் எங்கு போய் முடியப்போகிறது என்று.

 

Related Post

அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

Posted by - October 27, 2023 0
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார். அதில்…

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - January 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்

Posted by - July 15, 2023 0
மாவீரன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன். ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும்…

பாபா படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Posted by - December 8, 2022 0
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்…

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *