திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

351 0

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் கள்ளக்காதலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.Two youths murdered in Kadapa over alleged old disputes, police start probe

அந்த பெண்ணிற்கு கடந்த 2015-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்தில் திருமண வாழ்க்கை கசக்க, இந்த ஜோடி பிரிந்தது. அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது ஆதேஷ் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு பின் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் தனிமையில் சந்திக்க, அந்த பெண் கர்ப்பமானார். இதனால் ஆதேஷ் இடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், ஆதேஷ் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முயற்சி செய்தார். அந்த பெண்ணை தீர்த்துக்கட்ட நான்கு பேர் உதவியை நாடினார்.

அவர்களும் கொலை செய்ய ஒப்புக் கொண்டர். சம்பவம் நடைபெற்ற ஜூலை 2-ந்தேதி ஆதேஷ் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த பெண் ஆதேஷ் வீட்டிற்கு வந்ததும், தயாராக இருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்த்து செங்கலால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், உடலை வயல்வெளியில் வீசி, யாருக்கும் தெரியாததுபோன்று வீட்டில் இருந்துள்ளார். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

Related Post

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

Posted by - March 13, 2025 0
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை…
CBSC

10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கு இனி மதிப்பெண் சதவீதம் இல்லை- சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
புதுடெல்லி: மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *