சிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

264 0

Mahasivarathri 2025 | சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளில் பலரும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு முன்பு உங்கள் கனவு பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்..!

பொதுவாகவே பிரதோஷம், சிவராத்திரி சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பெண்களுக்கு 9 ராத்திரி நவராத்திரி என்றும், ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும் புராணங்கள் கூறுகிறது. இந்த சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.இந்து மத நம்பிக்கையின் அடிப்படையிலும், கனவு சாஸ்திரத்தின் படி எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்கள் நம் கனவில் வரும் என்று சொல்லப்படுகிறது. அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சமயங்களில் அந்த கனவுகள் சுப அறிகுறிகளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் கனவில் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.இந்து நாட்காட்டியின் படி, மகாசிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 26, புதன்கிழமை வருகிறது. அன்றைய இரவு தான் கண்விழித்து விரதம் இருப்பார்கள். இந்தத் தேதியில் ருத்ராபிஷேகம் செய்வதால், சிவபெருமான் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியவை மூலம் சிவனின் அருளை பெறலாம்.அபிஷேகம் : மகாசிவராத்திரிக்கு முன், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால், சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து, அந்த நபரின் அனைத்து கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார் என்று அர்த்தம். மேலும் இந்த கனவு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வருகையைக் குறிக்கிறது.வில்வ இலைகள்: சிவராத்திரிக்கு முன்பு உங்கள் கனவில் வில்வ இலைகளோ, அல்லது வில்வ மரத்டை கண்டால் நிதி பிரச்சனைகளை தீரும் என்று சொல்லப்படுகிறது.ருத்ராட்சம்: ருத்ராட்சம் மிகவும் மங்களகரமானதாகும். பொதுவாகவே ருத்ராட்சம் கனவில் வருவது மிகவும் சிறப்பாகும். அதிலும், சிவராத்திரி முன்பு கனவில் தோன்றினால் துன்பங்கள் விலகி நோய் நொடியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.கருப்பு சிவலிங்கம்: கருப்பு சிவலிங்கம் சிவபெருமானின் சின்னம். மஹாசிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் கருப்பு சிவலிங்கத்தைக் கண்டால், உங்கள் வேலையில் விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.பாம்பு : மகாசிவராத்திரிக்கு முன் பாம்பு அல்லது பாம்புகளின் புற்றுகளை கண்டால், அது உங்கள் செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.திரிசூலம்: சிவன் எப்போதும் திரிசூலம் வைத்திருப்பார். திரிசூலத்திற்கு 3 விளிம்புகள் உள்ளன. அவை காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறிக்கின்றன. படைப்பின் ஒற்றுமையை நிலைநாட்ட சிவபெருமான் திரிசூலத்தைப் பயன்படுத்துகிறார். மஹாசிவராத்திரியின் போது இந்த கனவு வந்தால், மகாதேவன் உங்கள் எல்லா கஷ்டங்களையும் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.

maha shivratri
shivaratri 2025
maha shivratri 2025
shivratri 2025
maha shivaratri 2025
महाशिवरात्रि
महाशिवरात्रि कब है

Related Post

“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Posted by - February 25, 2025 0
இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு…

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

மற்ற இன்டர்நெட் சேவைகளை பின்னுக்கு தள்ளப்போகும் ஜியோ ஏர் ஃபைபர்… சிறப்பம்சங்கள் என்ன?

Posted by - August 28, 2023 0
எண்ணற்ற இன்டர்நெட் யூசர்கள் ஜியோ ஃபைருக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். #jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #anantambani…
Generated Image February 06 2026 10 50AM

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

Posted by - February 6, 2026 0
 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 25 ஆண்டுகளில்…

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

Posted by - April 6, 2023 0
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *