தேங்காய் பாறை மீனின் அற்புதம்.. பெண்களுக்கு வரப்பிரசாதம்.. பாறை மீன் வாங்கினால் இப்படி செய்யுங்க

257 0

சென்னை:

பாறை மீன்கள் என்றாலே ருசியானவை என்றாலும், தேங்காய்ப்பாறை மீனை பலரும் வாங்க என்ன காரணம் தெரியுமா? தேங்காய் பாறை மீனிலுள்ள நன்மைகள் என்னென்ன?

பாறை மீன்கள் பொதுவாக, பாறைகளிலேயே மறைந்து கொள்ளுமாம்.. பாறை என்பது பொதுவான பெயராகும். அதில் ஒன்றுதான் தேங்காய் பாறை மீன்கள். இந்த தேங்காய் பாறையில் குழம்பு வைத்தாலும், வறுவல் செய்தாலும், இரண்டுமே சுவையாக இருக்கும்.

நன்மைகள்:

அதனால்தான், தென்மாநிலங்களில் பாறை மீனுக்கென்று ஸ்பெஷல் இடம் உண்டு. இதன் விலையும் மிகவும் குறைவு.. தட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய மீனில் இதுவும் ஒன்றாகும். தேங்காய் பாறையின் நன்மைகள் என்னவென்றால், இதில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன.. அதனால், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பாறை மீனை சமையலில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்..

அத்துடன், கலோரிகளும் இதில் குறைவாக உள்ளன. இந்த பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாராகின்றன.. வைட்டமின் A, D, B 12 இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. அதாவது, 100 கிராம் பாறை மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9, நீர்ச் சத்து 66.70 கிராமும் இருக்கிறதாம்.. வைட்டமின் A உள்ளதால், கண்களுக்கு மிகவும் நல்லது. வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளே வராதாம்.

கெட்ட கொழுப்புகள்:

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைவதால், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும். அத்துடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு தடுத்து நிறுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை தாராளமாக சாப்பிடலாம், செட்டிநாடு ஸ்டைலில், இந்த தேங்காய் பாறை மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.. ஒரு வாணலில், எண்ணெய் விட்டு வெங்காயம், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும். இதிலேயே சிறிது தேங்காய், புளிளையும் சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைத்து, பிறகு மொத்தத்தையும் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்

செட்டிநாடு குழம்பு:

ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், மீன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து இறக்கினால் செட்டிநாடு குழம்பு ரெடி. மண் சட்டியில், தேங்காய் ஊற்றாமலும் இந்த பாறையை குழம்பு வைக்கலாம்.. மண்சட்டியில் எண்ணெய், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது பூண்டு பற்கள் சேர்த்து, கனிந்த தக்காளி பழத்தையும் பிழிந்து போட்டு வதக்க வேண்டும்.

மண்பானை :

இப்போது புளி கரைசலில் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது மீன்குழம்பு மசாலா என அனைத்தையும் சேர்த்து கரைத்து, வாணலில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, தேங்காய் பாறை மீனை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியை தூவினால், ருசியான மண்பானை மீன் குழம்பு ரெடி.

Related Post

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

Posted by - January 2, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஜய்…

ஜில்லென தண்ணீர் குடித்தால் மெட்டபாலிசம் அதிகரித்து எடை குறையுமா.?

Posted by - February 16, 2023 0
உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலக அளவில் மிகப்பெரிய குறைபாடாக மாறி வருகிறது. அவசரமாக இயங்கும் உலகம், ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு…

14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள்

Posted by - June 13, 2023 0
ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்து இவரது நடிப்பில்…

ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்…

Posted by - March 11, 2023 0
ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும்…

இதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்.. தயாரிப்பாளர் காட்டம்

Posted by - April 27, 2023 0
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *