தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க…

237 0

மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க... | Cabbage Chutney

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் – 200 கிராம்

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி – 1/2 இன்ச்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

புளி – சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் – 1

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!

Related Post

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

முதல் நாளே எலிமினேஷனா? பிக் பாஸ் வைத்த செக்.. முதல் ப்ரோமோ

Posted by - October 6, 2025 0
பிக் பாஸ் 9 பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம்…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …

6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட்..பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்

Posted by - November 3, 2023 0
லாவண்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா. ஷாக்கிங் தகவல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய…

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

Posted by - April 10, 2023 0
பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார். அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *