நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப்

235 0

காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப் | Chicken  Vegetable Soup

தேவையான பொருட்கள் :

சிக்கன் – கால் கிலோ

வெங்காயம் – 1

காளான் – 1 கப்

கேரட் – 3

பீன்ஸ் – 3

கோஸ் – சிறிய துண்டு

தனி மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும். பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும். கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.

Related Post

எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

Posted by - August 19, 2023 0
80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல்…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Posted by - April 5, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை…

Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

Posted by - August 16, 2024 0
Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில்…

‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

Posted by - September 12, 2023 0
மறக்குமா நெஞ்சம் கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *