நோய் வரும்னு பயமா இருக்கா? அதுவே ஒரு நோய்தான்.. இப்படி ஒரு மன வியாதி இருப்பது தெரியுமா?

261 0

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உடல்நலன் குறித்து சாமானிய மக்களிடமும் கூட அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். நம் தாத்தா, பாட்டிக்கு வந்த நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் நமக்கு வந்துவிடக் கூடாது என்று நாம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கத்தான் செய்வோம். அதிலும், கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உடல்நலன் குறித்து சாமானிய மக்களிடமும் கூட அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விழிப்புணர்வு ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் செல்வது நமக்கே ஆபத்தாக முடியலாம். அதாவது, நமக்கு ஏதேனும் பெரிய நோய் வந்து விடுமோ என்று எந்த நேரமும் கவலை கொண்டிருப்பது நல்லதல்ல. இதனை illness anxiety disorder (IAD) நோய் குறித்த கவலை பிறழ்வு என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகின்றனர்.

ஐஏடி ஏற்படக் காரணம் என்ன

ஒவ்வொரு மனிதருக்கும் இந்த கவலைக்கான காரணங்கள் வேறுபடும். இந்த காரணத்தினால் தான் ஐஏடி ஏற்படும் என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. எனினும், நம் உடல் இயல்பாக வெளிப்படுத்தக் கூடிய சில அறிகுறிகள் குறித்து நாம் அச்சம் கொண்டிருந்தால் அது ஐஏடி பிரச்சினையாக மாறலாம்.

குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது ஒருவருக்கு மிகுந்த தீவிரத்தன்மை கொண்ட நோய் இருக்கும் பட்சத்தில், அதுகுறித்து வீட்டில் எப்போதும் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதன் எதிரொலியாக ஒரு நபருக்கு ஐஏடி பிரச்சினை ஏற்படலாம்.

குழந்தைப் பருவத்தில் மிகத் தீவிரத்தன்மை கொண்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதிலிருந்து குணம் அடைந்திருந்தாலும் நோய் குறித்த கவலைகள் அதிகரிக்கலாம். எந்த விஷயத்தையும் அதிர்ச்சிகரமான மனநிலையுடன் அணுகுபவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்

ஐஏடி என்பதே கற்பனையான அறிகுறிகள் தான். இந்த நிலையில் இருப்பவர்களை அலட்சியப்படுத்தாமல் மிகுந்த மரியாதையுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.அவர்களுக்கு எந்த நோயும் இல்லை, நோய் இருப்பதாக பெரும் கற்பனையில் இருப்பதுதான் ஐஏடி பாதிப்பு என்று பொறுமையாக எடுத்துச் செல்ல வேண்டும். அதே சமயம், இவர்களுக்கான தெரஃபி, ரிலாக்ஸ் அளிக்கும் உத்திகள், மருந்துகள் என பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன.அதே சமயம், ஐஏடி பிரச்சினை இருப்பவர்கள் இளம் வயதிலேயே உயிரிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது என்றும், தற்கொலை எண்ணங்கள் வளரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்களை எந்தச் சூழ்நிலையிலும் தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது.

Related Post

வீடியோவா எடுக்குற உன்ன.. ரசிகரின் செயலால் கடுப்பான அஜித் குமார்..

Posted by - January 5, 2024 0
அஜித் குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் முழுவீச்சுடன் நடந்து வருகிறது. சமீபத்தில் மகளின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் அஜித்…

மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

Posted by - August 10, 2024 0
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…

தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க…

Posted by - March 1, 2023 0
மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – 200…

ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

Posted by - January 17, 2024 0
BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *