பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

221 0

Hukum பாடலால் சர்ச்சை

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது. இந்த பாடலில் இடம்பெற்ற வரிகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hukum பாடலில் ‘இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரிகள் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இந்த வரிகள் விஜய்யை தான் குறிப்பிடுகிறது என்றும், வேண்டுமென்றே தான் விஜய்யை தாக்கி ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் இந்த வரிகளை வைத்துள்ளார் என்றும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா

கடந்த சில வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பல சண்டைகள் நடைபெற்று வருகிறது. விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் என தயாரிப்பாளர் கூற ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் ரஜினி இப்படி வரிகளை தன்னுடைய படத்தில் வைத்துள்ளார் என தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆனால், தற்போது மட்டுமின்றி சிவாஜி படம் வெளிவந்த போதே இப்படிப்பட்ட விஷயங்களை ரஜினி செய்துள்ளார். ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல. பாடல் வரிகளால் இரு ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையே பெரும் சண்டை சமுக வலைத்தளத்தில் உண்டாகியுள்ளது.

ஆனால், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, நடிகர் விஜய்யே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் தான் என்பது. அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற வசனத்தை பேசி தான் தனது தந்தையிடம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை விஜய் பெற்றார். அதுமட்டுமின்றி தன்னுடைய ஆரம்பகால படங்களில் ரஜினிகாந்தின் ரெபெரென்ஸ் கூட விஜய்யின் படங்களில் இருக்கும்.

அப்படி ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் விஜய் எந்த ஒரு இடத்திலும் தன்னை அடுத்த சூப்பர்ஸ்டார் என சொல்லிக்கொள்ளவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை பற்றி பொதுவான சினிமா ரசிகர்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Related Post

“சாவுன்னு வந்தாலே என் பெயர எழுதிட்றாங்க” – கடுப்பான நடிகர் கலையரசன்

Posted by - January 7, 2025 0
ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை…

“அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு” – ஆர்யா அதிரடி!

Posted by - May 29, 2023 0
காதர் பாட்ஷாவும், என்ற முத்துராமலிங்கம்” படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கோவை வந்த ஆர்யாமற்றும் நடிகை சித்தி இத்நானி ஆகியோர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தனர்.   இயக்குனர் முத்தையா…

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - January 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

Posted by - September 4, 2024 0
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி…

“கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த விக்கி – நயன்”

Posted by - April 5, 2023 0
கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *