பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

236 0

விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், விடைத்தாள் திருத்தம் மையத்திற்கு உள்ளே வரும் ஆசிரியர் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைத்தோ வழங்கக்கூடாது என்றும், முறையாக மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீடுகளில் தவறு நேர்ந்தால் விடைத்தாள் திருத்தப்பணி மையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 79 மையங்களில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு

Posted by - May 29, 2025 0
தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தன்னை சந்திக்க யாரும்…
Gemini Generated Image bj7m1ebj7m1ebj7m

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

Posted by - March 28, 2026 0
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Posted by - December 28, 2022 0
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு.. ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை…

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

Posted by - December 15, 2023 0
சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *