+2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் – அட்டவணை

318 0

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள்,  உடனடியாக துணை தேர்வு எழுதுவதற்கான முழு விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

12ம் வகுப்பு துணைத்தேர்வு

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியத்தின் கீழ் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில்  7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மே 9ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட முடிவுகள் ஒருநாள் முன்பே இன்று வெளியாகியுள்ளது. அதில் ஒட்டுமொத்தமாக 95.03 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 4.97 சதவிகித மாணவ, மாணவிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் நேர விரயம் ஏதுமின்றி உடனடியாக துணைத்தேர்வுகளை எழுதி, விரைந்து கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

+2 துணைத்தேர்வு எப்போது?

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,   12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு, மே 14ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன்‌ மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள துணைத்தேர்வுகளுக்கு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்‌ தேர்வினை எழுதி தோல்வியடைந்த / தேர்வுக்கு வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும்‌, விண்ணப்பிக்கத் தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும்‌, இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

+2 துணைத்தேர்வு எப்படி விண்ணப்பிக்கலாம்?

12ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத / தேர்வுக்கு வராத மாணவர்கள்‌, தோல்வியுற்ற பாடங்களை மீண்டும்‌ எழுத தாங்கள் பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று 14.05.2025 ( புதன்கிழமை) முதல்‌ 31-05-2025 வரை வரையிலான நாட்களில்‌ ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல்‌ மாலை 5.௦௦ மணிக்குள்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌.

அதேநேரம், 12ம் வகுப்பு துணைத்‌ தேர்விற்கு  விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுள்ள தனித்தேர்வர்கள் 14.05.2025 (புதன்கிழமை) முதல்‌ 31.05.2025 (சனிக்‌ கிழமை ) வரையிலான நாட்களில்‌ ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பங்களை ஆன்‌-லைனில்‌ பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள் சேவை மையங்களின்‌ (Government Examinations Service Centres) விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்தல்‌ குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌.

+2 துணைத்தேர்வு அட்டவணை:

12ம் வகுப்பு துணைத்தேர்வு வரும் ஜுன் மாதம் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வி பெற தகுதி உடையவர்கள் ஆவர். இந்த தேர்வுக்கான விரிவான கால அட்டவணை நாளை அதாவது 09-05-2025 அன்று வெளியிடப்பட உள்ளது.

Related Post

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

கருணை இருக்கு…நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்…

Posted by - January 11, 2025 0
பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்காததற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் கருணை இருக்கு ஆனா நிதி இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொங்கல்…

வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது- ரூ.1945-க்கு விற்பனை

Posted by - July 1, 2023 0
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்” – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Posted by - March 1, 2024 0
திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது கொடூர…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *