பத்தே நிமிடத்தில் எப்படி உடனடி ‘மொறுமொறு மெது வடை’ செய்யலாம்.? சிம்பிள் ரெசிபி..

244 0

Medu Vadai Recipe | அனைவருக்கும் பிடித்த இந்த மெது வடையை 10 நிமிடத்தில் சுவையாக எப்படி மொறுமொறுவென்று செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று ‘மெது வடை’. அதுவும் வடை மொறு மொறுவென்று இருந்தால் மேலும் இரண்டு வடை சேர்த்து சாப்பிடுவார்கள். டீக்கடை முதல் பெரிய ஹோட்டல் வரை எங்கு சென்றாலும் டீ, காபியுடன் முதலில் வாங்கி சாப்பிடுவது இந்த மெது வடையை தான்.

பொதுவாக மாலையில் குறிப்பாக மழைக்காலங்களில் காபி, டீயுடன் வடை சேர்த்து சாப்பிட்டால் அந்த மாலைப்பொழுது மனதிற்கு அவ்வளவு நிறைவாக இருக்கும்.

அப்படி அனைவருக்கும் பிடித்த இந்த மெது வடையை 10 நிமிடத்தில் சுவையாக எப்படி மொறுமொறுவென்று செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • உளுந்து – 1 கப்
  • வெங்காயம் – 1
  • பச்சைமிளகாய் – 2
  • மிளகு – 1 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உளுந்தை நன்றாக சுத்தம் செய்து இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி காயவைத்துக் எடுத்து கொள்ளுங்கள்.

உளுந்து காய்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை சல்லடை கொண்டு நன்றாக சலித்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் அரைத்து சலித்து வைத்துள்ள உளுந்து மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

பிறகு அதை வடை மாவுக்கு பிசைவது போல் பிசைந்து வைத்து கொள்ளவேண்டும்.

பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு மூடி போட்டு அப்படியே வைக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் சீரகம், மிளகு மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொறுமையாக போட்டுக்கொள்ளுங்கள்.

வடை ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான ‘மொறு மொறுப்பான வடை’ தயார்.

Related Post

biggboss

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான்

Posted by - December 2, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 சீசன் தான் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி…

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023 0
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய்…

முடிவுக்கு வரும் முக்கியமான 3 சீரியல்கள்.. அண்ணன் தங்கை பாசத்திற்கு பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Posted by - August 17, 2024 0
சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள்…

நான் பிச்சை எடுத்தேனா? மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் சீரியல் நடிகர்?

Posted by - October 18, 2024 0
தமிழில் எத்தனை சீரியல்கள் வந்தந்தாலும் மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு தனி இடம் தான். 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்றும் அந்த மெட்டி ஒலியை மறக்க முடியாது .…

ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

Posted by - September 17, 2023 0
தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது ராதிகாவின் குடும்பம். ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *