“பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றி” – ஈரோடு இடைத்தேர்தல்.. த.வெ.க வெளியிட்ட அறிவிப்பு!

155 0

திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி போட்டியிடுவது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததை அடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 25ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக மற்றும் பாஜக அறிவித்துள்ள நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதை அடுத்து இதுவரை தேர்தலில் போட்டியிட 9 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

இதையடுத்து வரும் 18ஆம் தேதி வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷ் பரிசீலனை செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 28ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் விஜயின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது த.வெ.க.வும் போட்டியில்லை என்று அறிவித்துள்ளது.

Related Post

விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்

Posted by - September 12, 2025 0
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யை எதிர்ப்பது ஏன்? என்று சீமான் மனம் திறந்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் சட்டமன்ற…
TVK Vijay

TVK Vijay: வடக்கும் எனக்கு தான், கொங்கும் எனக்கு தான்..! (அ)திமுகவின் கோட்டைகளை குறிவைத்த CM விஜய்

Posted by - May 23, 2026 0
TVK Vijay: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தங்களது கோட்டைகளாக கருதும், வடக்கு மற்றும் கொங்கு மாவட்டங்களை முழுமையாக கையகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின்…
dmk 2

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - February 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

“கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை” – திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Posted by - November 6, 2024 0
கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின்…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *