போராட்ட களத்தில் கலைஞரின் ”பராசக்தி” வசனம்.. தமிழக முதல்வரின் கவனத்தை பெற்ற போராட்டம் . … அடுத்தது என்ன?

216 0

 

https://youtu.be/ePpWCGZz-bQ

ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி… ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்? பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள், பலர் இறந்தும் விட்டார்கள்… இருப்பவர்களுக்காவது சம ஊதியம் கேட்டு போராடுகிறோம்.”இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் இருக்கும் ஊதிய வேறுபாடுகளை சரி செய்யக் கோரி, டிசம்பர் 27 முதல் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நேற்றைய தினம், தொடக்கக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இப்பேச்சுவார்த்தையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து, அச்சங்கத்தை சேர்ந்த ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “பேச்சுவார்த்தை நடத்திய முதன்மைச் செயலாளர், அரசு முடிவெடுக்க கால அவகாசத்தை கோரினார். நாங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பொறுத்திருக்க தயார். ஆனால், எங்களுக்கு ஒரு தேதியை குறிப்பிட்டு சொல்லுங்கள். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம் என்றோம்.இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தில், நேரில் பங்கு கொண்டு, எங்களுடன் தோளோடு தோளாக நின்றார் முதல்வர் மு.க ஸ்டாலின். அவர் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். இத்தனை ஆண்டு காலமாக நாங்கள் இழந்த தொகையை கேட்கவில்லை. இனி வரும் காலத்தில் ஆவது, சம ஊதியத்தை வழங்குமாறு கேட்கிறோம். இப்பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபெற்ற இடைநிலை ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஞானசேகரனிடம் பேசினோம். அவர் பேசுவையில், “31.5.2009-க்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அப்போது 11,170 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன் பின்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூபாய் 8,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது. அன்றைய தேதிக்கு 3,170 ரூபாய் எங்களுக்கு ஊதியம், குறைவாக வழங்கப்பட்டது. இன்றைய தேதிக்கு, ஊதியத்தில் மாதம் தோறும் 20,000 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி… ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்? இந்த 10 ஆண்டுகளில், பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள், பலர் இறந்தும் விட்டார்கள்… இருப்பவர்களுக்காவது சம ஊதியம் கேட்டு போராடுகிறோம். முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ஆனால் முதல்வரை நெருங்க முடியவில்லை. இந்தாண்டு தமிழக பட்ஜெட்டில், ரூ.30,000 கோடிக்கு மேல் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற, அரசிற்கு மாதம் 20 கோடி மட்டுமே தேவைப்படும். இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் எடுத்துரைத்தோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார் அமைச்சர். முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு நல்ல முடிவு எட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

3-வது நாளாக நடைபெறும் இப்போராட்டத்தில், பங்கு பெற்ற 60-க்கும் மேலான ஆசிரியர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்பதே போராடும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post

புழல் ஏரியின் கரையில் உடைப்பா… தமிழக அரசு விளக்கம்

Posted by - December 7, 2023 0
புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்ப்பு..

Posted by - December 28, 2022 0
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆலோசனையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *