மிரட்டும் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 59 பேர் அனுமதி- தடுப்பு நடவடிக்கை தீவிரம்

291 0

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.மிரட்டும் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 59 பேர் அனுமதி- தடுப்பு நடவடிக்கை  தீவிரம் | 59 people admitted in a single day due to threatening dengue fever-  preventive measures intensified
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Post

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *