முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

395 0

pimple scar removal home remedies | உங்கள் முகம் எப்பவும் பள பளன்னு இருக்கணுமா?… அப்போ இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன் கிடைக்கும்.

நம்மில் பலருக்கும் ஆரோக்கியமான சருமத்தை பெற ஆசை. ஆனால், அது வெறும் நிராசையாகவே இருக்கும். ஏனென்றால், முகப்பருக்களை ஒழித்துக்காட்டுவது என்பது லேசான விஷயம் அல்ல. அப்படியே பருக்களை நீக்கினாலும், அதனால் ஏற்படும் கருமை மற்றும் தழும்புகளை நீக்குவது எளிதான விஷயம் அல்ல.

சருமத்தில் காணப்படும் பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்கும் பேஸ் பேக் ஒன்றினை தக்காளி மற்றும் பப்பாளியை பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி – 50 கிராம்.

பப்பாளி – 50 கிராம்.

பேஸ் பேக் செய்ய சிறிய கிண்ணம் ஒன்று.

papaya face pack 1591948372 lb

செய்முறை :

எடுத்துக்கொண்ட தக்காளி பழத்தை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட பப்பாளி பழத்தினை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

தற்போது மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து, அதில் நறுக்கிய தக்காளி, பப்பாளி பழம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து, தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ள பேஸ் பேக் ரெடி.

எப்படி பயன்படுத்துவது?

முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு தடவி 15 – 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.

பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்யவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

பயன்கள் :

இந்த பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தக்காளி ஆனது, வைட்டமின் பி1, பி3, பி5 மற்றும் பி9 ஆகியவற்றின் சிறந்த மூலமாக உள்ளது. இவை, சருமத்தின் ஈரப்பத்ததை தக்க வைத்து, மிருதுவான மற்றும் மென்மையான சருமம் பெற உதவுகிறது.

பப்பாளி முகத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த பேக், சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட தக்காளி மற்றும் பப்பாளி பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேஸ் பேக் ஆனது சரும துளைகளில் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.

Related Post

image 3

குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - March 4, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள். விதவிதமான கதைக்களம் கொண்ட…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Posted by - June 3, 2023 0
பெங்காலியில் செம ஹிட் தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் தொடரில்…

படு மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி.. டாப் 5ல் கூட வராத விஜய் டிவி சீரியல்கள், முழு விவரம்

Posted by - October 18, 2024 0
டாப் சீரியல்கள் சின்னத்திரை தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக உள்ளது. படங்களை பற்றியும், அதில் வருபவர்களை தாண்டி சீரியல்கள், அதில் நடிக்கும் நடிகர்கள்…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *