முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை வழங்கும் ரயில்வே நிறுவனம்….. ஜூலை 31ம் தேதி இறுதி முடிவெடுக்கும் RITES

328 0

முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது. ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு 4 பங்குகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் போனஸ் பங்குகள் வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#sharemarket #nifty #nse #bse #rites #demate #accounts
பொதுத்துறை ரயில்வே நிறுவனமான ஆர் ஐ டி இ எஸ் (Rail India Technical and Economic Service) நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இது குறித்த ஜூலை 31ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது. ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு 4 பங்குகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் போனஸ் பங்குகள் வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஆர் ஐ டி இ எஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கி உள்ளது. அதாவது 1:4 போனஸ் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு பங்கை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு 4 இலவச பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் தங்களுடைய இலவச இருப்புக்களை மூலதனமாக்குவதற்காக போனஸ் பங்குகளை வெளியிடுகின்றன. பங்கு ஒன்றுக்கான வருவாய் (EPS) மற்றும் செலுத்தப்பட்ட மூலதனத்தை அதிகரிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் கையிருப்பையும் குறைக்கின்றன. பங்குதாரர்களுக்கு இந்தப் பங்குகள் எந்த விதமான செலவும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும்.

ஏற்கனவே பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மட்டுமே போனஸ் பங்குகளை பெற தகுதியானவர்கள். அதாவது போனஸ் பங்குகளை பெறுவதற்கான ரெக்கார்ட் தேதிக்கு முன்பு பங்குகளை டீமேட் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். ரெக்கார்ட் தேதிக்கு பிறகு வாங்கும் பங்குகளுக்கு போனஸ் பங்குகள் கிடைக்காது.

ஆர் ஐ டி இ எஸ் நிறுவனத்தின் பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 0.99% குறைந்து ரூ. 668.50 ஆக இருந்தது. இந்த பங்கு கடந்த 12 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு 46% வருவாயை வழங்கியுள்ளது.RITES நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 34% வருமானத்தை அளித்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் 3% வருவாயையும் கொடுத்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 14% விலை குறைந்துள்ளது.

Related Post

கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் ‘சாக்லேட்’ பரிசு

Posted by - செப்டம்பர் 21, 2023 0
மும்பை: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று ‘சாக்லேட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்

Posted by - மார்ச் 17, 2023 0
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது. அதில், ஒரு…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - டிசம்பர் 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - ஏப்ரல் 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - ஜூலை 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன