என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

377 0

தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் தலைவர்கள் தீவிர பரப்புரையில் உள்ளனர். ராஜஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் சொத்துகள் மற்றும் தங்கத்தை கணக்கெடுத்து, அவற்றை நாட்டில் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இஸ்லாமியர்களை குறிப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையான நிலையில், நேற்று ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மீண்டும் அதை சுட்டிக்காட்டி பேசினார். தனது 90 விநாடி பேச்சால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் அச்சமடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய பிரதமர் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் கட்சி விளையாடுவதாக குற்றம்சாட்டினார். பட்டியலின மக்களுக்கு அம்பேத்கர் அளித்த இடஒதுக்கீடு உரிமையை, வாக்கு வங்கிக்காக, இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறினார். மேலும், இடஒதுக்கீடு எப்போதும் மாற்றப்படாது எனவும், மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படாது எனவும் பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related Post

அதிர வைக்கும் வாட்ஸ்அப் விபச்சாரம்..! 14,000 அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரம்..!

Posted by - December 9, 2022 0
வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து அந்த படத்தை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஐதராபாத்தில் வாட்ஸ்அப் மூலமாக விபச்சாரம் நடத்திய…

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் செய்த மோசடி: ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டின் நிலைமை என்ன?

Posted by - November 16, 2023 0
மும்பை: சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார். 1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா…

மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? ‘இந்த’ வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

Posted by - December 16, 2024 0
உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு…

முன்னேறும் பாஜக: தடுமாறும் ‘இ.ண்.டி.யா’

Posted by - February 15, 2024 0
“அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன் குறிப்பிட்ட…

கள்ளக்காதலுக்கு இடையூறு- 4 வயது மகளை கொன்று நாடகமாடிய கல்நெஞ்ச தாய்

Posted by - July 31, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22). இவர்கள் 2018-ம் ஆண்டு காதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *