ரசிகர்களுக்கு செம ட்ரீட்… வெளியானது AK62 டைட்டில்…

294 0

அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு அடுத்ததாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கம் படத்தில் நடிப்பதாக இருந்தார்.

ஆனால் ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து விலக்கப்பட்டார். அதனையடுத்து, அவரது படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்துவந்தது. அஜித் ரசிகர்கள் பட அறிவிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.

அஜித் தற்போது தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நேபாளில் உள்ளார். ஆனால் அவர் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 62-வது படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை படக்குழுவினருக்கு அறிவுறுத்திவிட்டார். இதனால் அஜித் 62 படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவரது பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.

அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடிவந்தனர். லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டது. படத்தின் இயக்குநரையும் உறுதிசெய்துள்ளது.

அதன்படி, லைகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் விடா முயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மோதும் தனுஷ்

Posted by - November 9, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன்,…

எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு

Posted by - January 27, 2023 0
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  #rajinikanth #thalaivar #superstar #rajini #thalapathy #superstarrajinikanth…

சர்ச்சைகளில் `வாரிசு’

Posted by - December 2, 2022 0
இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக…

லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 9, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

Posted by - March 3, 2025 0
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *