ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

323 0

சென்னை:

இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக இனிமேல் தஞ்சாவூரிலும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

அதில், தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கே பல நிறுவனங்கள் குவிய தொடங்கி உள்ளன. டெல்டா மாவட்டங்களை ஸ்டார்ட் அப் ஹப்பாக மாற்றும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது..  எங்கே தெரியுமா? | Thanjavur is getting full-fledged airport soon with the  construction near air force ...

அமைச்சர் சொன்னது என்ன?:

ஐடி பார்க் இங்கே வருகின்றன. இதனால் விவசாய மக்களுக்கு பாதிப்பு இல்லை. இங்கே உள்ள இளைஞர்கள், இளைஞிகள் பலன் அடைவார்கள். அதேபோல் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை இங்கே கொண்டு வரப்படும். மாசை ஏற்படுத்தாத தொழிற்பேட்டைகள் இங்கே கொண்டு வரப்படும். எந்த மாசும் இல்லாத தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்படும்.

தஞ்சைக்கு விமானம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது அரசின் பல ஆண்டு கனவு. இதற்காக விரைவில் அறிவிப்புகள் கொண்டு வரப்படும். ஒரு காலத்தில் இங்கே விமான சேவை இருந்தது. இந்த நிலையில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அதிகாரபூர்வம்:

இந்த நிலையில் அதிகாரபூர்வமாக இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. 200 கோடி செலவில் ஒரு புதிய உள்நாட்டு முனையத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது மற்றும் முனையத்திற்கு 4 வழி அணுகுமுறை சாலையை.. அதாவது 4 லேன் சாலையை அமைக்குமாறு தமிழ்நாடு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

இதற்கான பணிகள் அங்கே விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் தஞ்சாவூர் விமானப்படை தளம் அருகே உள்ள பகுதியில் இந்த முனையம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முனையத்திற்காக 26.5 ஏக்கர் நிலம் இந்திய விமானப்படையிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது

விமான நிலையங்கள் அதிகரிப்பு;

தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு சேவையைத் தொடங்கி உள்ளது, முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்.

தினமும் காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும். விமான நிலையம்: பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானம் 1.45 மணிக்கு இங்கு தரையிறங்கும். டிக்கெட் முன்பதிவுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கான சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 2,390 ரூபாயிலிருந்து தொடங்கும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

திருச்சி விமானம்:

தற்போது புதிய விமான சேவைகளும் திருச்சிக்கு கிடைக்க தொடங்கி உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த சேவை மூலம் 1 மணி நேரம் 15 நிமிடத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும். இரவு 12.15 மணிக்கு இந்த சேவை மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றரை மணிக்கு நள்ளிரவில் இந்த விமான பெங்களூரை அடையும்.

இது தினசரி சேவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கண்ணை மூடி திறக்கும் முன் பெங்களூருக்கு எளிதாக திருச்சியில் இருந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சியில் இருந்து பெருநகரங்களுக்கு தற்போது பயணம் மிக எளிதாகி உள்ளது. திருச்சியில் தற்போது புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் முடிந்ததும் விரைவில் கூடுதல் விமானங்கள் இங்கே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

Posted by - April 24, 2025 0
மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு…

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

Posted by - January 9, 2024 0
உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற…

திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். திரைப்பட வாழ்க்கை 1978…
Generated Image November 13 2025 5 12PM

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - November 13, 2025 0
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *