ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

223 0

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின் “கைதி” படத்திற்கு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்..

இதற்கு அடுத்த விஜய் நடிப்பில் உருவான “மாஸ்டர்” படத்தை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இந்த ஹிட் படங்களின் வரிசையில் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து “விக்ரம்” படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இணையும் புதிய கூட்டணி

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படம் அவர்கள் இருவரின் திரை வாழ்விற்கு பெரிய மாற்றமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்..

இயக்குனர் லோகேஷ் ரஜினியுடன் இணைவார் என எதிர்பார்த்த சூழலில், ரஜினி “ஜெய் பீம்” இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதால், அதை முடித்து விட்டு லோகேஷுடன் இணைவார் என சொல்லப்படுகிறது.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆதிபுருஷ் மற்றும் தற்போது உருவாகி வரும் Project K என இரு திரைப்படங்களும் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பத்து தல படம் எப்படி இருக்கு..

Posted by - March 28, 2023 0
பத்து தல கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம்…

காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்

Posted by - October 16, 2023 0
விஜய்யின் லியோ வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால்…

அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன

Posted by - May 16, 2024 0
நடிகர் அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு…

ரீரிலீசுக்கு காத்திருக்கும் அடுத்த 6 படங்கள்.. எந்தெந்த படங்கள் எப்போது ரீ ரிலீஸ் தெரியுமா?

Posted by - April 29, 2024 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ரீரிலீசாக காத்திருக்கும் 6 படங்கள்.. எந்தெந்த படங்கள் தெரியுமா?தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் படங்களின் வரவு நாளுக்கு நாள்…

1999ஆம் ஆண்டு படையப்பா படம் செய்த வசூல்..

Posted by - December 11, 2025 0
படையப்பா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்காற்றிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *