லியோ பட பாடலில் கை வைத்த சென்சார் போர்டு… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

435 0

அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன..

 

விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. முன்னதாக படத்திலிருந்து முதல் பாடலாக நா ரெடி என்ற பாடல் வெளியிடப்பட்டு இருந்தது.இதில் இடம்பெற்றிருந்த பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டுவா சியேர்ஸ் அடிக்க என்ற வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.இதேபோன்று மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான் என்ற வரியும் மதுப்பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல் இருப்பதாகவும், இதனை முன்னணி நடிகர் சொல்வது ஏற்க முடியாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் சென்சார் போர்டு நான் ரெடி பாடலில் பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டுவா சியேர்ஸ் அடிக்க என்ற வரியை நீக்கியுள்ளது. 4.17 நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில் 32 வினாடிகள் காட்சிகள் நீக்கப்பட்டள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இருப்பினும் இந்த பாடல் வரிகள் நீக்கம் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

திருந்த நினைக்கும் அனைவருக்கும் பாடமாகும் வெற்றி மாறனின் புகைப்பிடிப்பு கதை – ஜேம்ஸ் வசந்தனின் பளிச் பதில்..

Posted by - June 19, 2025 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரை, தமிழ் அரசியல் சூழல் உள்ளிட்ட பல துறைகளில் தனது கருத்துக்களை திறந்தவெளியில், தைரியமாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு…

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023 0
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில்…

படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.

Posted by - June 13, 2025 0
தக் லைஃப் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட…

கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்….யார் அந்த ஹீரோ?

Posted by - February 20, 2024 0
தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம். படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *