விஜய் கட்சியில் இணைய முடிவு.. நடிகை வாணி போஜன்

296 0

நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரைப் போலவே தனக்கும் அரசியல் ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்கள் நலப்பணிகளை செய்து வந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

அவர் அரசியலில் ஈடுபட உள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், தமிழ் திரைப்பட நடிகை வாணி போஜனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான எந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், தற்போது சினிமா மற்றும் வெப் சீரீஸ் இரண்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய வாணி போஜன், “நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.

செங்களம் என்ற வெப் சீரீஸில் நடித்தபோது எனக்கும் அரசியல் மீது ஆர்வம் வந்தது. அந்த ஆர்வம் தற்போதும் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், வாணி போஜன் விஜய் கட்சியில் சேர்வதற்காக இப்படி அடி போடுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக, கமலஹாசன் கட்சி தொடங்கியபோதும் நடிகை ஸ்ரீபிரியா அவரது கட்சியில் இணைந்ததை குறிப்பிட்டு அதேபோல் வாணி போஜனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவாரா என்ற கேள்வியும் எழுகிறது.

Related Post

ஷாலினியை தாண்டி வளர்ந்த அஜித்தின் மகள்!! லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

Posted by - March 13, 2023 0
அஜித் – ஷாலினி நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..இதோ

Posted by - September 20, 2023 0
ரவீந்தர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ரவீந்தர்…

அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *