‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்….விசு வெற்றிகண்ட 5 படங்கள்..

428 0

விசுவின் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கும். அதிலும் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை மையமாக வைத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பார். அப்படியாக விசு-வின் இயக்கத்தில் வெற்றி கண்ட 5 சிறந்த படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

வேடிக்கையின் வாடிக்கை: விசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேடிக்கை என் வாடிக்கை. இதில் எஸ்வி சேகர், பல்லவி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் விசு பொறுப்புள்ள தாய் மாமாவாக இருந்து தங்கையின் பிள்ளைகளுக்கு  எவ்வாறு திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானதாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் காக்கி சட்டை கந்தசாமி என்னும் கதாபாத்திரத்தில் விசு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

jpg

சம்சாரம் அது மின்சாரம்: எம் எஸ் குகன் தயாரிப்பில்1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இதில் விசு, ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தின் கதையானது கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி மிக அழகாக  எடுத்து சொல்லும் படமாக அமைந்திருந்தது. மேலும் படத்தில் சந்தேகப்பட்டதற்காக தீக்குளித்தது அந்த காலம் சந்தேகப்படுபவர்களை தீயில் தூக்கி போடுவது இந்த காலம் என்று மனோரமா பேசும் வசனங்கள் இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நீங்க நல்லா இருக்கணும்: ஜி வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் விசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நீங்க நல்லா இருக்கணும். இதில் நிழல்கள் ரவி, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், மனோரமா, சந்திரசேகர் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் கதையானது மதுவினால் உண்டாகும் தீமைகளை சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் சிறந்த சமூக கருத்துடைய படமாக இப்படம் அமைந்திருந்தது. அதிலும்  இந்தப் படமானது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவே இருந்தது.

 

மீண்டும் சாவித்திரி: பி. ராகி ரெட்டி தயாரிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீண்டும் சாவித்திரி. இதில் விசு, ரேவதி, சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தின் கதை ஆனது நடுத்தர குடும்பத்திற்கு ஏற்படும் வரதட்சணை பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் கதையானது அமைந்திருக்கும். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிகாமணி ரமாமணி: ராஜ் கோ தயாரிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிகாமணி ரமாமணி. இதில் எஸ் வி சேகர், ஊர்வசி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தின் கதையானது நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்னர் வசதி படைத்த ஒருவரை சந்தித்த பிறகு எப்படி எல்லாம் அவரின் வாழ்க்கை மாற்றுகிறது என்பதை மையமாக வைத்து படத்தின் கதையானது அமைந்துள்ளது.

Related Post

சினிமா நேர்காணலில் பேசிய நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தோற்றம் குறித்த கருத்து

Posted by - நவம்பர் 22, 2026 0
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் தனித்துவமான கதாபாத்திர தேர்வாலும் முத்திரை பதித்த முன்னணி நடிகையாவார். சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ மற்றும்…

லியோ வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங்கில் இவ்ளோ பெரிய மோசடியா- அம்பலமாக்கிய பிரபலம்

Posted by - அக்டோபர் 27, 2023 0
லியோ படம் பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே மக்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், அதிக அளவிலும் கொண்டாடுவார்கள். அப்படி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம்…
சென்னையில் நடைபெற்ற அனிருத் ரிசப்ஷன் விழாவில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள்

அனிருத் ரிசப்ஷன் விழாவில் ரஜினி ஸ்டாலின் விஜய் சந்திப்பு

Posted by - நவம்பர் 22, 2026 0
அனிருத் ரிசப்ஷன் விழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மிக விமரிசையாக நடைபெற்றது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வில்…

மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை, மண்ணை அள்றவனுக்கு இல்லை.. ‘பத்து தல’ டீசர்..!

Posted by - மார்ச் 4, 2023 0
சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த…
Generated Image November 27 2025 10 19AM

விஜய், அஜித்தால் கூட முடியவில்லை.. ஆனால், அதை செய்து காட்டிய சூர்யா.

Posted by - நவம்பர் 27, 2025 0
கருப்பு சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் திரிஷா,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன