வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

234 0

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.ஹிப்ஹாப் தமிழா சின்ன பையன் மியூசிக் வீடியோ | Hiphop Tamizha Chinna Paiyan  Album Song Music Video Vaisagh | Galatta

ஹிப்ஹாப் ஆதி தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் வீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக அறிவித்திருந்தது.

ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளான இன்று வீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

நெல்சன் போட்ட கண்டிஷன்ல ஆடிப்போன சன் பிக்சர்ஸ்.. நம்பிக்கை இல்லாத ரஜினியும் இதுக்கு உடந்தை

Posted by - December 7, 2024 0
ரஜினி திருவல்லிக்கேணியில் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை இயக்கும் லோகேஷ் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை இந்த படத்திற்கு கொண்டு வருகிறார். இந்தப்…

ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

Posted by - August 4, 2025 0
ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது…

ரசிகர்களுக்கு செம ட்ரீட்… வெளியானது AK62 டைட்டில்…

Posted by - May 1, 2023 0
அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.…

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

Posted by - August 30, 2023 0
தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.…

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம்

Posted by - September 27, 2023 0
நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளிவந்தால் அது தான் அன்றைய ஹாட் நியூஸ் ஆக இருக்கும். நேற்று கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *