உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

237 0

வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி | Vitamin D is essential for the body

வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாகக் கூறப்படுகிறது.

மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப்பொருட்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி’யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் ‘டி’யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம்.

அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் ‘டி’யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளலாம்.

மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி’யை பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி’யும் இருப்பதாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Related Post

‘இனி இவருக்கு பதில் இவர்’ எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை. அடடே இவரா ?

Posted by - January 6, 2023 0
சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து கம்போஸ் பின்…

பிக் பாஸ் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அப்போ சீரியல்? ரசிகர்கள் ஷாக்

Posted by - September 21, 2023 0
விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். முன்பு…

தலைவலி, உடல்வலி என எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொள்பவரா நீங்கள்? பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு.!

Posted by - March 4, 2024 0
பராசிட்டமால் என்பது ஆன்டிபிரைடிக் மருந்தாகும். பொதுவாக வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாக உதவும் பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலம் எடுத்து கொள்ளும்…

Easy Tips:உடல் எடையை குறைக்க ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட டயட் மற்றும் டிப்ஸ்…

Posted by - February 18, 2025 0
ஹன்சிகா மோத்வானி நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக கடந்த 2003ம் ஆண்டு நடிக்க தொடங்கியலர் 2007ம் தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம்…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - June 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *