தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல்- அதிமுகவின் புதிய வியூகம் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் முன் கூட்டியே தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை 4 முனை போட்டி தமிழகத்தில் உறுதியாகியுள்ளது. இதில் திமுக– அதிமுக இடையிலான போட்டியால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முதல்கட்டமாக திமுக அமைச்சர்கள் மீது அதிமுக– பாஜக கூட்டணி குறிவைத்துள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேடி தேடி எடுத்துள்ளது அதிமுக தலைமை, அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை தயார் செய்துள்ளது. அமைச்சர்கள்…
Read More