75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

179 0

  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், அடுத்த 18 மாதங்களுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர், இளைஞர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருவதே திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை என்று கூறினார்.அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் கூறினார்.நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்புக்காக இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தேர்வு முகமைகள் முலம் 32,774 பேருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் மூலம் 32,730 பேருக்கும் பணி வழங்கப்பட்டதாக கூறினார்.2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Post

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!

Posted by - March 16, 2023 0
ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

இன்றுடன் விடைபெறும் 2022.. புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Posted by - December 31, 2022 0
New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக…

சுழன்று அடித்த மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த 48 மரங்கள்

Posted by - December 10, 2022 0
Mandous cyclone : நேற்று மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *