மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

242 0

நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு வரை நீங்கள் ஓவர் டிராஃப்ட் செய்து பணம் எடுக்கலாம்.

இன்றைக்கு அவரவர் சூழலுக்கு ஏற்ப பணத்தேவைகள் என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அன்றாட கூலி வேலைக்குச் செல்பவர்களிடம் கூட கையில் கொஞ்சம் பணம் இருக்கும். ஆனால் மாத சம்பளம் வாங்குவோரின் நிலை என்பது மிகவும் மோசமானது. சம்பளம் வந்த 10 நாள்களில் இஎம்ஐ, லோன், சேமிப்பு, குடும்பத்தேவைகள் என அனைத்திற்கும் செலவாகிவிடும். வங்கியில் மினிமம் பேலன்ஸ் இருந்தால் கூட அவசர தேவைகளுக்கு நாம் அதையும் பயன்படுத்தி விடுவோம்.

இந்த சூழலில் உங்களுக்குப் பணம் தேவைப்படும் பொழுது, உங்களுடைய வங்கிக் கணக்கு காலியாக இருந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பணம் கிடைக்குமா? என தேடி அலைவீர்கள். ஒரு சிலரோ லோன் எதுவும் கிடைக்குமா? என தேடி அலைவார்கள். இனி அந்த கவலை வேண்டாம்..நீங்கள் சம்பளம் பெறக்கூடிய உங்களது வங்கிக்கணக்கு காலியாக இருந்தாலும் இனி நீங்கள் அதிலிருந்து 3 மடங்கு வரை பணம் எடுக்க முடியும். ஆம் ஓவர் டிராஃப்ட் என்ற வசதியின் மூலம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் உங்களது சம்பளக் கணக்கிலிருந்து 3 மடங்கு வரை பணம் எடுக்க முடியுமாம்…

ஓவர் டிராஃப்ட் என்றால் என்ன?..

நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு வரை நீங்கள் ஓவர் டிராஃப்ட் செய்து பணம் எடுக்கலாம். உதாரணமாக மாத சம்பளம் ரூபாய் 50 ஆயிரம் என்றால் நீங்கள்1.5 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் செய்துக் கொள்ளலாம். அதே சமயம் இந்த குறுகிய கால கடனுக்கு நீங்கள் கொஞ்சம் வட்டி இதற்கு செலுத்த வேண்டியிருக்கும்.வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களைச் சமாளிக்க சிறிய கடனை எடுக்க உதவுகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளின் ஓவர் டிராஃப்ட் வசதிகளைப் பயன்படுத்தக்கூடிய நடைமுறை உள்ளது. இதன் மூலம் பணம் பெறும் போது 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.இந்த ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கு வங்கிக்கு செல்லலாம், அல்லது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். சில வங்கிகள் தங்களது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் சிலருக்கு இந்த வசதியைத் தானாக வழங்குகின்றன. இல்லையென்றாலும் கவலை வேண்டாம். நீங்கள் வங்கிக்கொண்டு நேரடியாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

Related Post

வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க..

Posted by - August 8, 2024 0
அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது.…

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - October 11, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில்…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

Posted by - May 9, 2023 0
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான…

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023 0
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *