“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது” – துணை முதலமைச்சர் #UdayanidhiStalin கண்டனம்!

139 0

வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், அதன் பொன்விழா ஆண்டு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, ஹிந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற வரியை மட்டும் விட்டுவிட்டு பாடலைப் பாடினர். இச்சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிட நல்திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்

யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, மத்திய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Post

கடலூர் ரயில் – வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?

Posted by - July 8, 2025 0
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதிய விபத்து யாருடைய அலட்சியத்தால் நிகழ்ந்தது என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள…

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

சவுமியா அன்புமணி வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்!

Posted by - April 10, 2024 0
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான…

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை: அமைச்சர்கள் + ஊழியர் சங்கங்கள்

Posted by - December 22, 2025 0
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.…

2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Posted by - December 31, 2025 0
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *