ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

189 0

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது.

தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர் விஜய் இன்று சென்னையில் உள்ள அவரது பனையூர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க (விஎம்ஐ) ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். இதில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் வதந்திகள் கிளம்பியுள்ளன.

ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசிய விஜய் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு சில வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர்களை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ரசிகர்களுடனான சந்திப்பிற்கு வந்த விஜய் கறுப்பு சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தார்.

நவம்பர் மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை விஜய் சந்தித்தார். இந்த தொடர் சந்திப்புகள் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த வதந்திகளுக்கு தீனி போடும் விதத்தில் அமைந்துள்ளது.

படங்களைப் பொறுத்தவரை இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது.வாரிசுக்குப் பிறகு, தளபதி விஜய் முன்னதாக மாஸ்டர் படத்தில் பணியாற்றிய லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு குறித்து ஜனவரி 2023-ல் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

Posted by - May 29, 2023 0
விடாமுயற்சி லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி…

பல நாள் கழித்து சிக்கிய லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் படத்தை காப்பி அடித்து தான் எடுத்ததற்கான சாட்சி

Posted by - July 13, 2023 0
லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக…

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

Posted by - June 15, 2024 0
இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என…

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *