விஷாலை கண்டு தெறித்து ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்.. நாலா பக்கமும் துப்பறிவாளனுக்கு மூடப்படும் கேட்

149 0

விஷால் என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். திடீரென இவருக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறோம் என யாராவது பிரச்சனைக்கு வந்து விடுகிறார்கள். அது மட்டும் இன்றி இப்பொழுது விஷால் படங்கள் பிசினஸ் கொஞ்சம் டல்லடித்து வருகிறது.வீரமே வாகை சூடும், லத்தி, மார்க் ஆண்டனி, ரத்னம், என எந்த படங்களும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதில் மார்க் ஆண்டனி மட்டும் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. இப்பொழுது அவர் கேட்கும் சம்பளமும் அதிக அளவில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் விஷால் என்றால் சற்று யோசனை செய்கிறார்கள்.

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எடுக்கலாம் என யோசித்த, மிஸ்கின் மற்றும் விஷால் இருவரும் இப்பொழுது மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். ஏற்கனவே அவர்களுக்குள் வாய்க்கா தகராறு இருந்த நிலையில், சமரசம் பேசி அந்த படத்தை எடுக்க முயற்சி செய்தனர்.

துப்பறிவாளன் இரண்டு எடுப்பதற்கு கதை எல்லாம் மிஸ்கின் எழுதிவிட்டார் ஆனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சனை வந்து படத்தை கைவிட்டு விட்டார்கள். அதனை தானே இயக்கப் போவதாக விஷால் கூறிக் கொண்டிருந்தார் இப்பொழுது அந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை20 கோடிகள் சம்பளம் கேட்கிறார் விஷால். சமீபத்தில் சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விஷால் ஆனால் அந்தப் படத்திற்கு இவர் கேட்ட சம்பளத்தால் அந்த நிறுவனம் பின்வாங்கியது. இப்படி வந்த வாய்ப்புகளை எல்லாம் வீணடிக்கிறார் வளந்த தம்பி.

Related Post

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - May 8, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

Posted by - February 9, 2026 0
நடிகர் ரஜினி உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் தற்போதும் இருந்து வருகிறார். ரஜினி உடன் நடித்த போது நடந்த பழைய நினைவுகளை நடிகை ராதிகா தற்போது ஒரு…

ஜவான் படம் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்

Posted by - September 7, 2023 0
ஜவான் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ முதன் முதலில் இயக்கியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன்…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - March 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *