1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

219 0

சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என இதுவரை எதிர்கொண்டிருந்த தி.மு.க.விற்கு இந்த முறை மிகப்பெரிய தலைவலியாக அமைந்ததிருப்பவர் நடிகர் விஜய்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

இந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் தி.மு.க., பா.ஜ.க.வே தங்கள் எதிரி என்று அறிவித்தார். மேலும் தி.மு.க.வின் கூட்டணியை உடைக்க விஜய் பல வியூகங்களையும் வகுத்து வருகிறார். 2025ம் ஆண்டு முதலே தமிழக அரசியல் கூட்டணி கணக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தி.மு.க.,விற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் ஒருபுறம் காய் நகர்த்தி வருகிறது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தி.மு.க. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகளை எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை:

அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் என்ற திட்டத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனாலும், முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அரசு மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசைப் பின்பற்றி கர்நாடகம், மகாராஷ்ட்ராவிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் மகளிர் உரிமைத் தொகையை அதிகரிப்பதுடன், இதுவரை விண்ணப்பித்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கையை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

கைகொடுக்குமா வியூகம்?

தி.மு.க. அரசு வகுத்துள்ள இந்த வியூகத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தி.மு.க. நம்புகிறது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு பெரியளவில் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் நம்புகிறது. பொங்கலுக்கு பிறகு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

அவதியை ஏற்படுத்தப்போகும் அனல்காற்று: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Posted by - March 1, 2023 0
நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் உயர்ந்து காணப்படும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அனல்காற்று அதிக அவதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதுகுறித்த இந்த…

அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

Posted by - March 24, 2025 0
மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு…

பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!

Posted by - November 21, 2025 0
தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று கூறி மீண்டும்…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - December 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *