அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி

181 0

கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

ADMK: கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

செங்கோட்டையன் அதிருப்தி

கோவை அன்னூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ”அத்திக்கடவு அவினாசி திட்டதக்குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படாததால் அதில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர  2011ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப்பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்களே மேடையில் இல்லை” என செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பான அழைப்பிதழில் கூட,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் மீண்டும் விரிசலா?

கோவை அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில், கட்சி சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால், அத்திக்கடவு – அவினாசி திட்டம் அமைய உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.

 

Related Post

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக-தவெக இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது | அரசியல் அப்டேட்

Posted by - December 19, 2025 0
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாஜக (BJP) மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK)-இருவருக்கும் இடையே கடும் வார்த்தை போர் ஆரம்பமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், திருப்பரங்குன்றம்…

யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி.. திமுக அரசு மீது விஜய் தாக்குதல்

Posted by - November 14, 2024 0
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனது…

இன்று தான் கடைசி.!

Posted by - March 4, 2026 0
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.…

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

Posted by - March 16, 2026 0
TVK Vijay: டெல்லியில் சிபிஐ விசாரணையின் மூன்றாவது கட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். TVK Vijay: கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *