மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்!

160 0

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பூர் போலீசார், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியால் பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர், உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Posted by - June 7, 2025 0
மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து…

சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

Posted by - January 13, 2024 0
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில்…

Sun TV கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - November 23, 2022 0
கயல் சீரியல் SUN தொலைக்காட்சியில் ஏன் தமிழ் சீரியல்களில் டாப்பில் இருக்கும் தொடர்  கயல் . சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க, சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.…

கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

Posted by - December 3, 2022 0
ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *