அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

142 0

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸ் பதவி மாற்றம் பணி செய்யப்பட்டு தலைவர் பதவியை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸே எடுத்துக்கொண்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.,

2026 இல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து வருகிறேன். அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கருதி முழு மனதுடன் இந்த அறிவிப்பை நான் இன்று வெளியிடுகிறேன் என்று அன்புமணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இனி அன்புமணி தலைவர் இல்லை – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பது மட்டுமல்லாமல் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்றும் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அமைப்பு ரீதியாகவும் மாற்றம்

எனது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பதவி வரிசை அறிவிப்பதில் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவதலைவர் ஜி கே மணி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா என அணி பொறுப்பாளர்கள் உள்ளவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவார்கள். இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றுபட்டு உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மே 11 மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இதுவரை கண்டிராத அளவில் மாபெரும் வெற்றிமாறாக நடத்திட மாநாட்டு குழு தலைவராக நியமன செய்யப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களோடு இணைந்து ஒன்றுபட்ட உணர்வோடு உழைக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ராமதாஸ் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முற்றிய மோதல் – நீக்கப்பட்ட அன்புமணி – ராமதாஸ் ஆவேசம்

பாட்டாளி மக்கள் கட்சியை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதில் நிறுவனரான ராமதாஸ்க்கும், தலைவரான அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடைபெற்று வந்ததாகவும், அதுதான் கடந்த பொதுக்குழுவில் வெடித்து, இளைஞரணி தலைவர் பதவி குறித்து நிர்வாகிகள் மத்தியிலே இருவரும் காரசாரமாக விவாதிக்க காரணம் என கூறப்பட்டது. அப்போது, ஆவேசமான அன்புமணி தான் பேசிக்கொண்டிருந்த மைக்கை தூக்கி டேபிளில் போட்டார். அதன்பின்னரும் ராமதாஸ், கட்சி என்னுடையது இங்கு நான் சொல்பவர்கள் தான் இருக்க  வேண்டும், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் பேசினார். அது இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து வேறுபாட்டை பட்டவர்தனமாக காட்டியது.

சமாதான படலம் தோல்வி – நீக்கப்பட்ட அன்புமணி

அதன்பின்னர், தைலாப்புரம் தோட்டத்தில் வைத்து அன்புமணியை சமாதானம் செய்ய நிர்வாகிகள் முயற்சித்தது பலனிக்களிக்கவில்லை. தன்னை கட்சியில் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும், மாறி வரும் கள சூழலுக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அதனை ஏற்காத ராமதாஸ், அவரை அந்த பதவியில் இருந்தே தூக்கி எறிந்துள்ளார்.

Related Post

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

Posted by - August 22, 2025 0
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

புதுசேரியில் திமுக ஆட்சி : ’ஸ்டாலின் பேசியதில் தவறில்லை…’ – நாராயணசாமி கொடுத்த விளக்கம்!

Posted by - December 13, 2022 0
Puducherry News : புதுச்சேரியில் திமுக ஆட்சி என கட்சியினரை உற்சாகப்படுத்த தமிழகக. முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள்…

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - September 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *