20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

191 0

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் 2 – ம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் நெல்சன்.

தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முடித்துக் கொடுத்துவிட்டு அதே வேகத்தில், ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

அதிரடி அப்டேட்

இந்நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று கோவை சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அப்போது அவரிடம் ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு, 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளேன். ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என…

ரஜினிகாந்தை இயக்குகிறாரா தனுஷ்?

Posted by - November 19, 2025 0
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்…

கங்குவா ரிலீஸ்… புதிய தேதி இதுதான்… வெளியானது அதிகாரபூர்வ அப்டேட்!

Posted by - September 19, 2024 0
படத்தின் ட்ரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று…

இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்.. இதுவரை கண்டிராத வசூல் சாதனை

Posted by - August 14, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கியிருந்தார். அளவுகடந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த…

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *