பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

197 0

விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் புயலை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் அந்த பேனர்களில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

சரிந்த பொன்முடி ராஜ்யம்:

முதலில் உயர்கல்வித்துறை..அடுத்தது மாவட்ட பொறுப்பு..அடுத்து துணை பொதுச்செயலாளர் பதவி..இறுதியாக அமைச்சர் பதவி என பொன்முடியின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்த நிலையில், விழுப்புரத்தின் ராஜாவாக இருந்த அவரது மதிப்பும் குறைய தொடங்கி அவர் டம்மி ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விழுப்புரத்தின் முடிசூடா மன்னனாக இருந்து வந்த பொன்முடியின் பவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது அமைச்சர் பதவியோடு விழுப்புரமும் பொன்முடியின் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விழுப்புரம் மொத்தத்தையும் தனது கன்ட்ரோலில் வைத்திருந்த பொன்முடியின் பவரை பிடுங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது திமுக தலைமை. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார் முன்னாள் எம்.பி.யும் பொன்முடியின் மகனுமான டாக்டர் கௌதம சிகாமணி.

மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன்

விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். அங்கு தான் விழுப்புரம் கலைஞர் அறிவாலயமும் அமைந்துள்ளது. தான் பார்த்து பார்த்து கட்டிய அறிவாலயத்தில் லட்சுமணன் அமர்வதில் பொன்முடிக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை.

இதனையடுத்து லட்சுமணனை எதிர்க்கும் வகையில் பல உள்ளடி வேலைகளை பார்த்து வந்தார் பொன்முடி. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால், தலைமையில் கடும் அதிருப்திக்கு ஆளாகி கட்சியில் இருந்தே ஒதுக்கப்பட்டார் பொன்முடி. இதைத்தொடர்ந்து லட்சுமணனின் கொடி விழுப்புரத்தில் உயரப் பறக்க தொடங்கியது. தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கி பொன்முடியின் இடத்தை பிடிக்க முட்டி மோதி வருகிறார் லட்சுமணன்.

தவிர்க்கப்பட்ட பொன்முடி:

இந்நிலையில் விழுப்புரம் மண்டல பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடி நியமிக்கப்படாமல் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்திற்கான போஸ்டர்கள் மற்றும் பேனர்களிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

கலைஞர் அறிவாலயம் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரான லட்சுமண்னின் கண்ட்ரோலில் வரும் நிலையில், லட்சுமணன் வேண்டுமென்றே பொன்முடியை புறக்கணித்து வருவதாக விழுப்புரம் திமுகவினர் பேசி வருகின்றனர். மேலும் நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் அமைச்சர் எம் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் ஏரியா என்பதால் அதில் பொன்முடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Post

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் – அண்ணாமலை காட்டம்

Posted by - February 23, 2024 0
  தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை…

இந்திக்கு 3 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒருநாள்: CBSE 10-ம் வகுப்பு தேர்வில் கூட மொழி வேறுபாடா?- அன்புமணி கண்டனம்

Posted by - November 4, 2025 0
இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது. தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.பா.ம.க. தலைவர்…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - November 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *