”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்

131 0

இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்தது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இந்தியா அடுத்தடுத்து தாக்கியுள்ளது.

இந்தியாவின் அடுத்தடுத்த பதிலடி:

இந்தியாவின் அடுத்தடுத்த தாக்குதல்களால் போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் துணை பிரதமர் இஷக் தார் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூரில், ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதே, போர் நிறுத்த முடிவுக்கு காரணம் எனவும் விளக்கமளித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பஞ்சாபில் உள்ள ஷோர்கோட் ஏர்பேஸ் இரண்டுமே இந்தியாவால் தாக்கப்பட்டதாகவும், அந்த சூழலில் தான் இந்த விவகாரத்தில் தலையிடும்படி அமெரிக்காவை நாடியதாகவும், சவுதி அரேபியாவின் உதவியை கோரியதாகவும் பாகிஸ்தான் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

நூர்கான் விமானப்படை தளம் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் மிகவும் முக்கியமான தளம் ஆகும். அங்கிருந்து விமானப்படை விமானங்கள் இயக்கப்படுவதோடு, விஐபி-க்களின் பயணமும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவிடம் சரணடைந்தது எப்படி?

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இஷக் தார், “துரதிருஷ்டவசமாக அதிகாலை 2.30 மணியளவில் இந்தியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. நூர் கான் ஏர்பேஸ் மற்றும் ஷோர்கோட் ஏர் பேஸ்களை தாக்கினர். அடுத்த 45 நிமிடங்களில் சவுதி இளவரசர் ஃபைசல் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரிடம், நான் ஏற்கனவே  அமெரிக்க உள்துறை அமைச்சரிடம் பேசியிருந்ததை தெரிவித்தேன். தொடர்ந்து, இந்தியா தாக்குதல்களை நிறுத்தினால் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளது என்பதை, ஜெய்சங்கரிடம் தெரிவிக்கவா என ஃபைசல் கேட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவே, போர் நிறுத்த விவகாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெரியப்படுத்தினார்” பாகிஸ்தான் துணை பிரதமர் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர்:

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், மே 7 மற்றும் 8ம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்து, போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா சார்பிலிருந்து வலுவான பதிலடிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த சூழலில் தான் ஏற்கனவே இருநாடுகளுடனும் தொடர்பில் இருந்த அமெரிக்கா, தாமதமின்றி உடனடியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்கும்படி பாகிஸ்தானிற்கு நடைமுறை உத்தரவை இட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 10ம் தேதி இருநாடுகளும் தாக்குதலை கைவிடுவதாக அறிவித்தனர்.

Related Post

”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு

Posted by - August 13, 2025 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள்…

90 சதவீதம் காலி.. ரஷியா ராணுவம் பற்றி அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல்..

Posted by - December 13, 2023 0
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர்…

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு- ஒரு லிட்டர் ரூ.272-க்கு விற்பனை

Posted by - February 16, 2023 0
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர் ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி…

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

Posted by - September 6, 2023 0
டோக்கியோ: இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை…

”உக்ரைனில் நடப்பது மோடியின் போர், திமிர் பிடித்த இந்தியர்கள்” – அமெரிக்காவின் அடாவடி பேச்சு

Posted by - August 28, 2025 0
USA India Tariff: உக்ரைனில் நடைபெறுவது மோடியின் போர் என, அமெரிக்க அதிபர் மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவேரா விமர்சித்துள்ளார். USA India Tariff:  ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *