கரூர் துயரம்; உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தை நீக்க வேண்டும்… உச்ச நீதிமன்றத்தில் தவெக முறையீடு

150 0

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மனுவில் விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர் நீதிமன்ற கருத்துகளை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஏற்கெனவே திட்டமிட்ட வழியில் அல்லாமல், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்திய வழியில்தான் த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளின் வாகனம் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளது.மேலும் சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்கவும் வலியுறுத்தியுள்ளது.கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது விஜய் மற்றும் நிர்வாகிகளுக்குத் தெரியாது எனவும், காவல் துறை தடியடி நடத்தியதால்தான் தவெக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.பிரச்னை ஏற்பட்டால் எந்நேரத்திலும் விஜய் மற்றும் நிர்வாகிகளின் வாகனத்தைத் திருப்பி அனுப்ப அதிகாரம் இருந்தும் காவல் துறை அப்படி எதையும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த மனுவை வியாழக்கிழமை விசாரிக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மற்ற மனுக்களோடு சேர்த்து வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Post

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - November 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…

தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!

Posted by - December 27, 2025 0
அ​தி​முக-வுடன் பியூஷ் கோயல் நடத்​திய பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, கசி​ய​விடப்​பட்ட தொகு​திப் பங்​கீடு குறித்த தகவல்​கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்​சிகளை தவெக பக்​கம் தடம் மாற…

‘TVK’ விஜய் – தேமுதிகவின் உண்மையான பயம்?

Posted by - November 22, 2025 0
தேமுதிகவின் ‘மெகா’ பேரமும்… எதார்த்தத்தை உணர்த்திய ஸ்டாலினும்! – ஒரு அரசியல் பார்வை ​தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்பதற்கான முதல்…

நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை

Posted by - February 20, 2025 0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில…

“நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி…

Posted by - March 12, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கும் சீனியர்களுக்கு, தலைமை ஒரு டாஸ்க் கொடுத்துள்ளதாம். அதற்காக, இபிஎஸ்ஸிடம் சரண்டராகியுள்ளார் பாஜகவின் ஒரு முக்கிய புள்ளி. பாஜக தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *