மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!

170 0

நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 11 வருடம் ஆன நிலையில் இப்போது, மறு எடிட் செய்து, மீண்டும் வெளியிட உள்ளதாகத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘பாட்ஷா’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சச்சின்’, உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றதால், ‘அஞ்சான்’ படத்தையும் இப்போது வெளியிட உள்ளனர்.

Related Post

மீண்டும் சீரியல் நடிக்கும் குஷ்பு.. எந்த சேனல் பாருங்க

Posted by - March 3, 2025 0
நடிகை குஷ்பு படங்கள், சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வந்த நிலையில் அதை சமீபத்தில்…

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை

Posted by - December 25, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் நேற்று விக்ரம் எலிமினேட் ஆனார். அவர் மாயா உடன் கடந்த ஒரு வாரமாக மோதலில் இருந்த…

சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!

Posted by - November 21, 2025 0
குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர்…

Money Case : பணப்பெட்டியுடன் பூர்ணிமா

Posted by - January 5, 2024 0
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் (Money Case) பூர்ணிமா ரவி வெளியேறி இருப்பது இன்றைய ப்ரோமோவில் தெளிவாக…

Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

Posted by - August 16, 2024 0
Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *