செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

172 0

சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் கட்சிகள், ஒரு கட்சியில் இருந்து  நிர்வாகிகளை இழுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அடுத்த கட்டமாக பாஜகவா.? திமுகவா.? எந்த கட்சியில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

நேற்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலை தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைவது குறித்தும், தவெகவில் தனக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பாகவும் ஆலோசித்தார். இதனையடுத்து இன்று காலை பனையூரில் நடைபெறும் விழாவில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொள்ளவுள்ளார் செங்கோட்டையன். அப்போது மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஈரோடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவு நிர்வாகிகளும் தவெகவில் இணையவுள்ளனர்.இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் அதிமுக மாஜி நிர்வாகிகளும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக அதிக ஆண்டுகள் இருந்தவர் சாமிநாதனும் தவெகவில் இணையவுள்ளார். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏவாகவும் இருந்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பை உருவாக்கி வரும் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரையும் விஜய்யின் தவெகவில் இன்று இணைகிறார். மேலும் காரைக்காலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனாவும் இன்று தவெகவில் இணையவுள்ளார்.

Related Post

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - September 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

Posted by - October 17, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *