யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

120 0

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சிராஜை (மத்திய பிரதேசம்) பட்டாகத்தியால் தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது தமிழகத்தில் இளைஞர்களின் தவறான போக்குகளையும், சமூக வலைதளங்களின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது” என்று கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை அரசு முன்கூட்டியே தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். போதைப்பொருள் நடமாட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை, கல்வி சூழல் இல்லாமை ஆகியவை இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். “இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற அரசின் அலட்சியம்” என்று விமர்சித்தார்.

விஜய், எஞ்சிய ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள்களை முழுமையாக கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தினார். “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டங்கள் இல்லை” என்று கூறிய அவர், அரசின் கொள்கைகளை கடுமையாக சாடினார்.

Related Post

“கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!” செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Posted by - September 6, 2025 0
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில்  நேற்று வெளிப்படையாக தெரிவித்தேன், கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றார். கட்சி பொறுப்பில் இருந்து…

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - September 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *