திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

111 0

தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய்.

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர் சாடி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.

ஆதாய சூதாடிகள்

தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

தேர்தலுக்கு தயாரான அதிமுக.!

Posted by - December 11, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு…

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் – லிஸ்டில் இருப்பது என்ன?

Posted by - August 23, 2025 0
TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், ஆட்டோவை பொது சின்னமாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *